Tamil Thalaivas: தமிழ் தலைவாஸ் போட்டியை நேரில் கண்டு ரசித்த துருவ் விக்ரம், மாரி செல்வராஜ்!

சென்னையில் நேற்று நடந்த தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 44ஆவது புரோ கபடி லீக் போட்டியை இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் துருவ் விக்ரம் இருவரும் நேரில் சென்று கண்டு ரசித்துள்ளனர்.

Dhruv Vikram and Mari Selvaraj enjoyed watching the Tamil Thalaivas and Gujarat Giants 44th Match in Pro Kabaddi League at SDAT Multi purpose Indoor Stadium, Chennai rsk

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையைத் தொடர்ந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருநெல்வேலியை தனது சொந்த ஊராக கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ், மழையென்றும் பாராமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினார். மழை வெள்ளத்தால் எத்தனை பேர் தங்களது வீடுகளை இழந்தனர்.

சென்னையில் நடந்த கடைசி போட்டியிலும் தமிழ் தலைவாஸ் தோல்வி – 8ல் 6 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 11ஆவது இடம்!

மழை ஓய்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் நடந்த புரோ கபடி லீக் தொடரின் 44ஆவது போட்டியை இயக்குநர் மாரி செல்வராஜ் நேரில் கண்டு ரசித்துள்ளார். அவருடன் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் வந்திருந்தார். சென்னையில் நடந்த கடைசி போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஏற்கனவே சென்னையில் நடந்த 3 போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் தோல்வி அடைந்திருந்த நிலையில், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் போட்டியிலும் பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய குஜராத் ஜெயிண்ட்ஸ் வீரர்கள் அதிக புள்ளிகள் பெற்று வந்த நிலையில் இறுதியாக 33 புள்ளிகள் பெற்றனர்.

எந்த மாதிரி பசங்கள பிடிக்கும்? அவங்கள தான் திருமணம் செய்வேன்.! வெட்கத்தில் சிவந்த ஸ்மிருதி மந்தனா முகம்!

தமிழ் தலைவாஸ் வீரர்கள் 30 புள்ளிகள் மட்டுமே கைப்பற்றினர். இதன் மூலமாக 3 புள்ளிகள் வித்தியாசத்தில் கடைசி போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளனர். இந்தப் போட்டியில் சிறந்து விளங்கிய குஜராத் ஜெயிண்ட்ஸ் வீரர்களுக்கு துருவ் விக்ரம் பரிசுகள் வழங்கினார். சென்னையைத் தொடர்ந்து நொய்டாவில் நடக்கும் போட்டியில் பெங்களூரு புள்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூரு காளைகள் (பெங்களூரு புள்ஸ்) அணிகளுக்கு இடையிலான 50ஆவது போட்டி வரும் 31 ஆம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டீன் எல்கரின் பொறுப்பான பேட்டிங்கால் 2ஆம் நாளில் தென் ஆப்பிரிக்கா 256 ரன்கள் குவிப்பு!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios