Asianet News TamilAsianet News Tamil

தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் மிரண்டுபோன நியூசிலாந்து பேட்ஸ்மேன்!! மறுபடியும் மாஸ் காட்டிய தல

நியூசிலந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் மீண்டுமொரு முறை மின்னல்வேக ஸ்டம்பிங் செய்து மிரட்டியுள்ளார் தோனி.
 

dhonis stunning stumping in third t20 against new zealand
Author
New Zealand, First Published Feb 10, 2019, 1:40 PM IST

நியூசிலந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் மீண்டுமொரு முறை மின்னல்வேக ஸ்டம்பிங் செய்து மிரட்டியுள்ளார் தோனி.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதலிரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், தொடரை வெல்வதற்கு வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் கடைசி போட்டியில் களமிறங்கியுள்ளன. முதலிரண்டு போட்டிகளில் ஆடிய சாஹலுக்கு பதிலாக இந்த போட்டியில் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

dhonis stunning stumping in third t20 against new zealand

ஹாமில்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்ததால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் முன்ரோ மற்றும் சேஃபெர்ட் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடினர். முதல் ஓவரிலேயே 11 ரன்களை குவித்தனர். புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா ஆகிய நால்வரின் பவுலிங்கையும் அடித்து நொறுக்கினர்.

dhonis stunning stumping in third t20 against new zealand

பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து இந்திய அணியை தெறிக்கவிட்டனர். ஒவ்வொரு பந்தையும் இந்திய பவுலர்கள் பயந்துகொண்டே வீசுமளவிற்கு அடித்தனர். 7 ஓவரில் நியூசிலாந்து அணி 79 ரன்களை அடித்துவிட, 8வது ஓவரை வீச குல்தீப்பை அழைத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. 

குல்தீப் யாதவ், அணியில் தனது முக்கியத்துவத்தை முதல் ஓவரிலேயே காட்டினார். தான் பந்துவீச வந்த முதல் ஓவரிலேயே சேஃபெர்ட்டை வீழ்த்தினார். முதல் பந்திலிருந்தே முன்ரோ மற்றும் சேஃபெர்ட்டை மிரட்டினார். 8வது ஓவரின் நான்காவது பந்தை குல்தீப் வீச, அந்த பந்தை டிஃபென்ஸ் ஆடுவதற்காக கிரீஸை விட்டு லேசாக முன்வந்தார் சேஃபெர்ட். அதற்குள்ளாக வழக்கம்போலவே மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து மிரட்டினார் தோனி. 

dhonis stunning stumping in third t20 against new zealand

இதையடுத்து அதிரடியாக ஆடிய தொடக்க ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்து பிரேக் கொடுத்தார். 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 43 ரன்களை குவித்து சேஃபெர்ட் ஆட்டமிழந்தார். இதையடுத்து தொடர்ந்து அதிரடியாக ஆடிய முன்ரோ, 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன்பிறகும் அடித்து ஆடிய முன்ரோவையும் குல்தீப் யாதவ் வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா வீசிய 13வது ஓவரில் முன்ரோவிற்கு இந்திய வீரர்கள் இரண்டு கேட்ச்களை தவறவிட்டனர். எனினும் அடுத்த ஓவரிலேயே முன்ரோவை வீழ்த்தினார் குல்தீப். 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 76 ரன்களில் முன்ரோ ஆட்டமிழந்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios