வயதை காரணம் காட்டி தோனியை விமர்சிப்பவர்களுக்கு ஒற்றை கேட்ச்சின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் தோனி.

இந்திய அணிக்கு மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த முன்னாள் கேப்டன் தோனி, தற்போது ஃபார்மில்லாமல் தொடர்ந்து சொதப்பிவருகிறார். அவரது வயதையும் அவரது ஃபார்மையும் சுட்டிக்காட்டி அவர் விமர்சிக்கப்படுகிறார். 

தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவந்தாலும், தோனியின் அனுபவம் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகிய காரணங்களால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை வரை தோனி ஆடுவார். எனினும் இதற்கிடையே அணியில் தோனியின் இருப்பு குறித்த விமர்சனங்களும் உள்ளன. 

ஆனால் தன் மீதான விமர்சனங்களுக்கு எல்லாம் தனது ஆட்டத்தின் மூலமே பதிலடி கொடுக்கும் தோனி, இம்முறையும் அப்படியான ஒரு பதிலடியை கொடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான மூன்றாவது போட்டியில் ஒரு கேட்ச் பிடித்தார். தோனி என்றால் யார் என்பதை அந்த கேட்ச் சொல்லும். 

பொதுவாக விக்கெட் கீப்பர்கள் காலில் கால் காப்பை மாட்டியிருப்பதால் அதிகதூரம் ஓடி ஃபீல்டிங் செய்யமாட்டார்கள். ஆனால் தோனியோ அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பவுண்டரி லைன் வரை ஓடி ஃபீல்டிங் செய்வார். அணியின் சீனியர் வீரர் என்று சீனெல்லாம் போடமாட்டார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் ஃபைன் லெக் திசையில் ஓடிச்சென்று ஒரு கேட்ச்சை பிடித்தார். அபாரமான கேட்ச் அது. அவரது வயதை சுட்டிக்காட்டி விமர்சிப்பவர்களுக்கு அதுதான் பதிலடி. வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் ஹேம்ராஜ் தூக்கி அடித்த பந்து ஃபைன் லைக் திசையில் உயரே பறந்தது. விக்கெட் கீப்பிங்கிலிருந்து அதிவேகமாக ஓடி அந்த கேட்ச்சை பாய்ந்து பிடித்தார் தோனி. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கேட்ச்சை தோனியின் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.