Asianet News TamilAsianet News Tamil

ஸ்டம்புக்கு பின்னாடி நிக்கிறது தோனிப்பா தம்பி!! ஆர்வக்கோளாறில் அவுட்டான ஹெட்மயர்

மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது. 
 

dhoni stumping hetmyer and west indies strugging to score runs
Author
Pune, First Published Oct 27, 2018, 4:00 PM IST

மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி புனேவில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பவுலிங் தேர்வு செய்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் அணியில் சேர்க்கப்பட்டனர். ஜடேஜா நீக்கப்பட்டு கலீல் அகமது சேர்க்கப்பட்டார். 

முதலில் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களை புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் அதிக ரன்களை குவிக்கவிடாமல் கட்டுப்படுத்தினர். அதனால் ரன்ரேட் குறைவாகவே இருந்தது. தொடக்க வீரர்கள் சந்தர்பால் ஹேம்ராஜ் மற்றும் பவல் ஆகிய இருவரையும் பும்ரா வீழ்த்தினார்.

dhoni stumping hetmyer and west indies strugging to score runs

அந்த அணியின் அனுபவ வீரர் சாமுவேல்ஸை இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது வீழ்த்தினார். இதையடுத்து ஷாய் ஹோப்புடன் அதிரடி வீரர் ஹெட்மயர் ஜோடி சேர்ந்தார். முதல் போட்டியில் சதம், இரண்டாவது போட்டியில் 94 ரன்கள் குவித்த ஹெட்மயர், இந்த போட்டியிலும் களமிறங்கியது முதலே அடித்து ஆட தொடங்கினார். 

கீழே கிடந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன்ரேட்டை மளமளவென உயர்த்தினார். வழக்கம்போலவே சிக்ஸர்களாக விளாசி கொண்டிருந்தார். 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 37 ரன்களை எடுத்த ஹெட்மயர், குல்தீப்பின் பந்தில் அசால்ட்டாக அவுட்டானார். குல்தீப் வீசிய பந்தை ஓங்கி அடித்து சிக்ஸருக்கு அனுப்ப முயன்ற ஹெட்மயர், பந்தை அடிக்காமல் விட்டார். அதேநேரத்தில் அவரது கால் கிரீஸை விட்டு மிகச்சிறிய அளவில் வெளியேறியது. ஆனால் கால் உள்ளே இருப்பதாகவே நினைத்த ஹெட்மயர் அசால்ட்டாக இருந்தார். மிகக்குறுகிய அந்த இடைவெளியையும் விட்டுவைக்காத தோனி, ஹெட்மயர் அடிக்காமல் விட்ட குல்தீப்பின் பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்தார். மூன்றாவது அம்பயரின் உதவியை நாடினார் கள நடுவர். அப்போது ரிப்ளே செய்து பார்த்ததில் நூழிலையில் ஹெட்மயரின் கால் வெளியே இருப்பது தெரியவர, ஹெட்மயர் ஆட்டமிழந்து வெளியேறினார்.

dhoni stumping hetmyer and west indies strugging to score runs

திடீரென விழுந்த இந்த விக்கெட் இந்திய அணிக்கு மிக முக்கியமானது. நல்ல வேளையாக தோனி ஸ்டம்பிங் செய்துவிட்டார். இல்லையென்றால் ஹெட்மயர் இந்த முறையும் அடித்து நொறுக்கி, அந்த அணி மெகா ஸ்கோரை எட்ட உதவியிருப்பார். 

ஹெட்மயரை தொடர்ந்து ரோமன் பவலும் ஆட்டமிழக்க, 5 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மந்தமாக ரன்களை சேர்த்துவருகிறது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் ஷாய் ஹோப் களத்தில் நிலைத்து நின்று ஆடிவருகிறார். அவருடன் அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios