Dhoni retains CSK Who knows who other teams retained?
ஐபில் போட்டியில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
வரும் ஐபிஎல் போட்டியில் ஓர் அணி தன்னிடம் இருக்கும் வீரர்களில் 5 பேரை ஏலமின்றி தக்கவைத்துக் கொள்வதற்கு ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்தது. ஒவ்வொரு அணியும் ஏலத்திற்கு முன்பாக நேரடியாக மூன்று வீரர்களையும், ஏலத்தின் போது இரண்டு வீரர்களையும் தக்க வைக்கலாம்.
இது, தடைக்காலம் முடிந்து 2018-ஆம் ஆண்டு சீசனில் போட்டிக்குத் திரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த 2015-ஆம் ஆண்டில் தங்கள் வசம் இருந்த வீரர்களை ஏலமின்றி தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
முன்னதாக, கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஒவ்வொரு அணியும் யார் யாரைத் தக்கவைத்து கொண்டுள்ளார்கள் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகிய மூவரையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதனால் இந்த மூன்று வீரர்களும் சென்னை அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.
அணிகளும் அவை தக்கவைத்துக் கொண்ட வீரர்களும் இதோ...
1.. சென்னை சூப்பர் கிங்ஸ்
தோனி (சம்பளம் - ரூ. 15 கோடி), சுரேஷ் ரெய்னா (ரூ. 11 கோடி), ஜடேஜா (ரூ. 7 கோடி
2.. மும்பை இந்தியன்ஸ்
ரோஹித் சர்மா (ரூ. 15 கோடி), ஹார்திக் பாண்டியா (ரூ. 11 கோடி), பூம்ரா (ரூ. 7 கோடி)
3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
விராட் கோலி (ரூ. 17 கோடி), டி வில்லியர்ஸ் (ரூ. 11 கோடி), சர்பராஸ் கான் (ரூ. 1.75 கோடி)
4.. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சுனில் நரைன் (ரூ. 8.5 கோடி), ஆண்ட்ரே ரஸல் (ரூ. 7 கோடி)
5.. டெல்லி டேர்டெவில்ஸ்
ரிஷப் பந்த் (ரூ. 8 கோடி), கிறிஸ் மாரிஸ் (ரூ. 7.1 கோடி), ஷ்ரேயாஸ் ஐயர் (ரூ. 7 கோடி)
6. கிங்ஸ் லெவன் பஞ்சாப்
அக்ஷர் படேல் (ரூ. 6.75 கோடி)
7.. சன்ரைசர்ஸ் ஐதராபாத்
டேவிட் வார்னர் (ரூ. 12 கோடி), புவனேஸ்வர் குமார் (ரூ. 8.5 கோடி)
8.. ராஜஸ்தான் ராயல்ஸ்
ஸ்டீவ் ஸ்மித் (ரூ. 12 கோடி)
