delhi madame tussauds honor virat kholi by fixed wax statue
விராட் கோலிக்கு டெல்லி மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி, பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். சச்சினின் பெரும்பாலான சாதனைகளை நெருங்கிவிட்டார் கோலி. இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சக்தியாக கோலி விளங்குகிறார்.
இந்நிலையில், கோலியை கௌரவிக்கும் விதமாக, அவரது சொந்த ஊரான டெல்லியில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலிக்கு மெழுகு சிலை ஒன்று அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கபில் தேவ், உசேன் போல்ட், மெஸ்ஸி ஆகிய விளையாட்டு வீரர்களுக்கு மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கோலிக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தனது சிலையை அமைத்து கௌரவித்ததற்காக விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார்.
