delhi daredevils punjab match today

ஐபிஎல் தொடரின் 22வது இன்று டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி, ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஆனால் பஞ்சாப் அணியோ, இதுவரை ஆடிய 5 போட்டிகளில் ஒரே ஒரு தோல்வியை மட்டுமே அடைந்துள்ளது. மற்ற 4 போட்டிகளிலும் வெற்றியடைந்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் பஞ்சாப் அணியின் கேப்டனான அஸ்வினின் கேப்டன்ஷியும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேப்டனாக அஸ்வினின் களவியூகங்கள், பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கின்றன.

தொடர் தோல்வியிலிருந்து மீள வேண்டும் என்ற முனைப்புடன் டெல்லி அணியும், தொடர் வெற்றியை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்புடன் பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களன ராகுலும் கெய்லும் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அவர்களை சமாளித்து டெல்லி வெற்றி பெறுமா? என்பதை பார்ப்போம்.

இன்றைய போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற்றால், 10 புள்ளிகளுடன் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும்.