Delhi Daredevils beat Rajasthan Royals jump to sixth
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது.
நேற்று டெல்லியில் நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. திடீர் மழையால் ஆட்டம் பாதிக்கப்படவே, 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பிருத்வி ஷா 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 50, ரிஷப் பந்த் 29 பந்துகளில் 69 ரன்கள் குவித்து அதகளப் படுத்தினார்.

டெல்லி 17.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. மீண்டும் மழை வந்ததால் ராஜஸ்தான் அணிக்கு 12 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனவே களத்தில் இறங்கிய ஜோஸ் பட்லர் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக அசத்தினார். அவர் 26 பந்துகளில், 4 பவுண்டர், 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் குவித்தார். அவர் ஆட்டமிழந்தபிறகு, ஸ்கோர் வேகம் படிப்படியாக குறைந்தது. கடைசியில் 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டெல்லி அணி 4 ரன்களில் இந்த சீசனில் மூன்றாவது வெற்றியைப் பெற்றது.

ஐபிஎல் டி-20 போட்டித் தொடரின் 11வது சீசனில் இதுவரை 31 ஆட்டங்கள் முடிந்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 8 ஆட்டங்களில் 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
