delhi daredevils and rcb loses play off chance because of srh
இரண்டு அணிகளை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவிடாமல் செய்துள்ளது வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி.
ஐபிஎல் 11வது சீசன் நடந்துவருகிறது. இந்த சீசனில் சென்னை, ஹைதராபாத், பஞ்சாப் ஆகிய அணிகள் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திவருகின்றன. கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வருகின்றன.
டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டன. இந்த இரண்டு அணிகளுமே கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில், ஹைதராபாத் அணியுடன் மோதி தோல்வியை தழுவின. இந்த இரண்டு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழப்பதற்கு ஹைதராபாத் அணி தான் காரணம்.
வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஹைதராபாத் அணியுடன் மோதிய டெல்லி அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. அதனால் டெல்லி அணி பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது.
அதேபோன்றதொரு சூழலில் நேற்று ஹைதராபாத்துடன் மோதிய பெங்களூரு அணி, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதன்மூலம் பெங்களூரு அணியும் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.
இவ்வாறு இரண்டு அணிகளை ஐபிஎல் தொடரிலிருந்து ஹைதராபாத் அணி வெளியேற்றியுள்ளது.
