தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். 

தென்னாப்பிரிக்க அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், அந்த அனியின் நட்சத்திர பவுலர். அவர் தென்னாப்பிரிக்க அணிக்காக 88 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 421 விக்கெட்டுகளையும் 116 ஒருநாள் போட்டிகளில் ஆடி 186 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இவர் கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடியதுதான். அதன்பிறகு ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. காயத்தால் அவதிப்பட்டுவந்த ஸ்டெயின், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடாமலேயே இருந்துவந்தார். 

இந்நிலையில், இரண்டு ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றுள்ளார் டேல் ஸ்டெயின். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் அணியில் ஸ்டெயின் இடம்பெற்றுள்ளார். அதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

டுபிளெசிஸ் தலைமையிலான அணியில் ஆம்லா, டுமினி, கிளாசன், ஹென்ரிக்ஸ், இம்ரான் தாஹீர், ரபாடா, நிகிடி, ஸ்டெயின், ஜோண்டோ, மார்க்ரம் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.