MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • T20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் முடிவால் ரூ.2,200 கோடி இழப்பு.. தவிக்கும் ஐசிசி.. அடுத்து என்ன நடக்கும்?

T20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் முடிவால் ரூ.2,200 கோடி இழப்பு.. தவிக்கும் ஐசிசி.. அடுத்து என்ன நடக்கும்?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு வருமானம் 35.5 மில்லியன் டாலர். ஆனால் இந்த ஒற்றைப் போட்டியால் கிடைக்கும் மொத்த வருமானம் 250 மில்லியன் டாலர்.

2 Min read
Author : Rayar A
Published : Feb 02 2026, 11:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இந்தியா பாகிஸ்தான் போட்டி ரு.2,200 கோடி வருமானம்
Image Credit : Getty

இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரு.2,200 கோடி வருமானம்

T20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணிக்க பாகிஸ்தான் எடுத்துள்ள முடிவு, கிரிக்கெட் உலகிற்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு இந்தியா-பாகிஸ்தான் போட்டி மட்டுமே சுமார் 250 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,200 கோடி) வருமானத்தை ஐசிசி-க்கு ஈட்டித் தருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
விளம்பர வருவாய் மட்டும் ரூ.250 கோடி
Image Credit : stockPhoto

விளம்பர வருவாய் மட்டும் ரூ.250 கோடி

இந்தப் போட்டி நடைபெறாமல் போனால், அனைத்து பங்குதாரர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படும். தொடரின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு உரிமையைக் கொண்டுள்ள 'ஜியோஸ்டார்' ஏற்கனவே ஐசிசியுடனான 3 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய முயற்சித்து வருகிறது. போட்டி ரத்து செய்யப்பட்டால், விளம்பர வருவாயில் மட்டும் 200 கோடி முதல் 250 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படலாம்.

10 வினாடி விளம்பரத்துக்கு ரூ.40 லட்சம்

இந்தப் போட்டியின் வெறும் 10 வினாடி கால அளவுள்ள ஒரு விளம்பர ஸ்லாட்டிற்கு 40 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு வருமானம் 35.5 மில்லியன் டாலர். ஆனால் இந்த ஒற்றைப் போட்டியால் கிடைக்கும் மொத்த வருமானம் 250 மில்லியன் டாலர். போட்டியைப் புறக்கணித்தால், ஐசிசி பாகிஸ்தானுக்கு வழங்கும் பங்கில் பெரும் குறைப்பைச் செய்ய வாய்ப்புள்ளது.

33
ஐசிசி எச்சரிக்கை
Image Credit : X/@ICC + Getty

ஐசிசி எச்சரிக்கை

இந்த விஷயத்தில் ஐசிசி ஏற்கனவே தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளது. "தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டிகளில் மட்டும் விளையாடுவது உலகளாவிய விளையாட்டுப் போட்டியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது" என்று ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. தொடரின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் இத்தகைய நகர்வுகளை தீவிரமாகப் பார்ப்பதாகவும் ஐசிசி எச்சரித்துள்ளது.

வங்கதேசமே மூல காரணம்

வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல்-இல் இருந்து நீக்க பிசிசிஐ அறிவுறுத்தியதே இந்த பிரச்சனைகளின் தொடக்கம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசம் தொடரில் இருந்து விலகியது. வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவித்து, பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்க முடிவு செய்தது.

தற்போது பாகிஸ்தான் அணி தொடரின் மற்ற போட்டிகளுக்காக கொழும்புவிற்குப் புறப்பட்டுள்ளது. ஆனால், பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அவர்கள் விளையாடுவார்களா அல்லது இந்தியாவிற்கு 'வாக்கோவர்' கிடைக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
பாகிஸ்தான்
இந்திய கிரிக்கெட் அணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
விவாகரத்து, குடிக்கு அடிமை, பேனிக் அட்டாக்.. மீண்டு வந்த யுஸ்வேந்திர சாஹலின் கண்ணீர் கதை!
Recommended image2
IND vs WI 5th T20: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த மழை.. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர் 2-2 என சமன்!
Recommended image3
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!
Related Stories
Recommended image1
T20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் நீக்கம்?.. நிரந்தர இடம் பிடிக்கும் இளம் அதிரடி வீரர்!
Recommended image2
T20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்.. பாகிஸ்தான் அறிவிப்பு.. ஐசிசி வைக்கும் ஆப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved