T20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தமிழக வீரர் நாராயண் ஜெகதீசனின் அதிரடி சதத்தால் இந்திய ஏ அணி அமெரிக்காவை வீழ்த்தியுள்ளது.
நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில், அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா ஏ அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தமிழ வீரர் நாராயண் ஜெகதீசன் சதம் அடித்து அசத்தினர்.
நாராயண் ஜெகதீசன் சதம்
டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பிரியான்ஷ் ஆர்யா (13 பந்துகளில் 28 ரன்கள், நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன்) அதிரடியாக ஆடி, ஜெகதீசனுடன் 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஜெகதீசன் 55 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 104 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 24 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 38 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் ஆயுஷ் பதோனி 60 ரன்
கேப்டன் ஆயுஷ் பதோனி (26 பந்துகளில் 60* ன்கள், ஆறு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன்) அதிரடி அரைசதம் அடிக்க, இந்தியா 20 ஓவர்களில் 238/3 ரன்கள் எடுத்தது. சுபம் ரஞ்சனே, அலி கான், மற்றும் ஜஸ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அமெரிக்காவும் நல்ல பேட்டிங்
சேஸிங்கின் போது, அமெரிக்கா தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தாலும், ஆண்ட்ரீஸ் கௌஸ் (31 பந்துகளில் 44 ரன்கள், ஐந்து பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன்), சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி (18 பந்துகளில் 41 ரன்கள், இரண்டு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன்), ரஞ்சனே (17 பந்துகளில் 28 ரன்கள், நான்கு பவுண்டரிகளுடன்) மற்றும் ஹர்மீத் சிங் (ஒன்பது பந்துகளில் 25 ரன்கள், இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் அந்த அணி 19.4 ஓவர்களில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கம்பேக் கொடுத்த திலக் வர்மா
ரவி பிஷ்னோய் (3/37) தனது சுழற்பந்து வீச்சால் விக்கெட் பட்டியலில் முன்னிலை வகித்தார். நமன் திர் (2/6) மற்றும் கலீல் அகமது (2/25) ஆகியோரும் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டனர். திலக் வர்மாவும் தனது ஒரு ஓவரில் 15 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஜனவரியில் ரஞ்சி டிராபி போட்டியின் போது ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட திலக், கிட்டத்தட்ட ஒரு மாதமாக விளையாடாமல் இருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் விளையாடவில்லை. இப்போது மீண்டும் கம்பேக் கொடுத்து ஒரளவு நன்றாக விளையாடியுள்ளார்.


