Asianet News TamilAsianet News Tamil

csk vs mi : 20 லட்சத்திடம் சோடைபோன ரூ.15 கோடி: இஷான் கிஷனை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

csk vs mi : மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் டக்அவுட்டில் ஆட்டமிழந்தபின் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்

csk vs mi :  Ishan Kishan Gets Trolled After Getting Dismissed For Golden Duck vs CSK
Author
Mumbai, First Published Apr 22, 2022, 11:06 AM IST

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் டக்அவுட்டில் ஆட்டமிழந்தபின் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. 
156 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

 

இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் முதல் பந்திலேயே முகேஷ் சவுத்ரியின் பந்துவீச்சில் யார்கரில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். பயிற்சி ஆட்டத்தில் அர்ஜுன் டெண்டுல்கரிடம் போல்டானது போன்று அதேமாதிரி ஆஃப் ஸ்டெம்ப் தெறிக்க இஷான் கிஷன் போல்டாகி ஆட்டமிழந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்கு விலைக்கு வாங்கியது. ஆனால், இதுவரை இஷான் கிஷன் பெரிதாக எந்த ஸ்கோரும் செய்யவில்லை. 

 

ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட முகேஷ் சவுத்ரியின் வேகப்பந்துவீச்சில் ரூ.15 கோடிக்கு வாங்கப்பட்ட இஷான் கிஷன் விக்கெட்டை பறிகொடுத்தார் என்று நெட்டிஸன்கள் கிண்டலடித்தனர்.நெட்டிசன்களில் ஒருவர் இஷான் கிஷன் பவுண்டரி எல்லையை பேட்டால் அடித்த காட்சியை பதிவி்ட்டு இஷான் கிஷன் பவுண்டரியை அடித்த காட்சி என்று கிண்டலடித்துள்ளார்.

மற்றொருவர் புள்ளிவிவரங்களை அடுக்கியுள்ளார் அதில் “ 2020ம் ஆண்டு ஐபிஎல் தவிர இஷான் கிஷன் எந்த ஐபிஎல் சீசனிலும் 300 ரன்களைக் கடந்ததில்லை. 7 ஐபிஎல் சீசன்களில் 6 சீசன்களில் இஷான் கிஷன் பிளாப்ஆகியுள்ளார். டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்ஸன், ரிஷப் பந்த்  இதில் யாரேனும் ஒருவரை நியமிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

மற்றொருவர் பதிவிட்ட கருத்தில் “ ரோஹித் சர்மா, இஷான் கிஷன் இருவருக்குமே மோசமான சீசனாக ஐபிஎல் இருக்கிறது.இருவருமே இன்று டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் பதிவிட்ட கருத்தில் “ பயிற்சியின்போது அர்ஜுன் டெண்டுல்கர் பந்துவீச்சில் அதே உத்தியில் வீசப்பட்ட பந்தில் இன்று இஷான் கிஷன் போல்டாகியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios