csk vs gt ipl 2022 : கிரிக்கெட்டில் கேட்ச் லாஸ், மேட்ச் லாஸ் என்பார்கள். ஒவ்வொரு போட்டியிலும் கேட்ச்சை கோட்டைவிடுவதுதான் எதிரணிக்கு திருப்புமுனையாக அமைகிறது. அந்தவகையில் நேற்றைய ஆட்டமும் சிஎஸ்கேக்கு எதிராக அமைந்துவிட்டது.
கிரிக்கெட்டில் கேட்ச் லாஸ், மேட்ச் லாஸ் என்பார்கள். ஒவ்வொரு போட்டியிலும் கேட்ச்சை கோட்டைவிடுவதுதான் எதிரணிக்கு திருப்புமுனையாக அமைகிறது. அந்தவகையில் நேற்றைய ஆட்டமும் சிஎஸ்கேக்கு எதிராக அமைந்துவிட்டது.
புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியி்ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே கேட்ச் பிடிக்க அன்னநடை போட்டு வந்ததைப் பார்த்து பிராவோவும், கேப்டன் ஜடேஜாவும் கடுப்பாகினர்.

புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தது. 170 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றனர். சிஎஸ்கே அணி ஐபிஎல் போட்டியில் 5-வது தோல்வியைச் சந்திக்கிறது.
இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் முக்கியக் காரணமாக அமைந்தார். 51 பந்துகளில் 94 ரன்களுடன்(6 சிக்ஸர், 8பவுண்டரி) இறுதிவரை மில்லர் ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் பொறுப்பு ஏற்று செயல்பட்ட ரஷித் கான் 21பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இந்த ஆட்டத்தில் டேவிட் மில்லர், ரஷித்கான் கூட்டணியைப் பிரிக்க சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் தீவிரமாக முயன்றனர். மில்லர், ரஷித்கான் கூட்டணி 6-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தனர். இருவரையும் பிரிக்க பிராவோ, ஜடேஜா , தீக்சனா என மாறிமாறி பந்துவீசியும்முடியவில்லை.
இதில் பிராவோ 17-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை மில்லர் சந்தித்தார். பிராவோ வீசிய பந்தை டீப்லெக்கில் மில்லர் தூக்கி அடிக்க அதை கேட்ச் பிடிக்க வேகமாகவந்த ஷிவம் துபே திடீரென நின்று அன்ன நடைபோட்டு நடக்கத் தொடங்கினார், கேட்சையும்பிடிக்கவி்ல்லை. இதைப் பார்த்த பிராவோவும், ஜடேஜாவும் கடுப்பாகி களத்தில் சத்தமிட்டனர். பிராவோ தலையில் கைவைத்துக்கொண்டே சென்றுவிட்டார்.
இந்த கேட்சை மட்டும் ஷிவம் துபேபிடித்தி்ருந்தால், டேவிட் மில்லர் ஆட்டமிழந்து ஆட்டமே சிஎஸ்கே பக்கம் சென்றிருக்கும். ஆனால், இந்த கேட்சை துபே கோட்டைவிட்டது, ஆட்டத்தின் வெற்றியை கோட்டைவிட்டது போலாகிவிட்டது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கை பக்கம் சென்ற வெற்றியை தோல்வியாக மாற்றியது ஷிவம் துபேதான்.
ஒருவேளை மில்லர் ஆட்டமிழந்திருந்தால், அடுத்து களத்தில் நின்று பேட் செய்யவும், நெருக்கடியான நிலையை சமாளித்து ஆடவும் பேட்ஸ்மேன் இல்லை என்பதால் வெற்றி சிஎஸ்கே வசமாகியிருக்கும். சிஎஸ்கேயின் தோல்விக்கு ஷிவம் துபேயின் கேட்ச்கோட்டைவிட்டதும் ஒருகாரணமாகும்.
சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா அளித்த பேட்டியில் “ நாங்கள் சேர்த்த 169 ரன்கள் டிபென்ட் செய்யக்கூடிய ஸ்கோர்தான். நல்லபடியாகத்தான் தொடங்கினோம், முதல் 6 ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆனால், கடைசி 5ஓவர்கள் எங்கள் திட்டப்படி ஏதும் நடக்கவில்லை. வெற்றிக்கு காரணம்மில்லர்தான். அருமையான ஷாட்களை ஆடினார்” எனத் தெரிவித்தார்
