csk is the only team that defeats all teams in this ipl season

ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

கடைசி லீக் போட்டி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே புனே மைதானத்தில் நேற்றிரவு 8 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், இந்த சீசனில் அனைத்து அணிகளையும் ஒருமுறையாவது வீழ்த்திய ஒரே அணி என்ற சாதனையை சென்னை அணி பெற்றுள்ளது. ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி ஆகிய அனைத்து எதிரணிகளையும் சென்னை அணி வீழ்த்தியுள்ளது.

இவற்றில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய இரண்டு அணிகளையும் இரண்டு போட்டிகளிலுமே வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.