csk is the most sixes scored in a single ipl season

ஐபிஎல் 11வது சீசன் நேற்றுடன் வெற்றிகரமாக முடிவடைந்தது. மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சென்னை அணி அசத்தியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை மீண்டும் தோனி தலைமையில் களமிறங்கிய சென்னை அணிக்கு, மிகச்சிறந்த ரீ எண்ட்ரியாக இது அமைந்தது. இந்த சீசனில் பல சாதனைகளை சென்னை அணி புரிந்துள்ளது. 

இந்த சீசனில் அனைத்து அணிகளையும் ஒரு முறையாவது வென்ற அணி, ஒரே சீசனில் ஒரு அணியை 4 முறை வீழ்த்திய சாதனை, மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது என பல சாதனைகளை சென்னை அணி படைத்தது. 

அந்த வகையில், ஒரு சீசனில் அதிகமான சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையையும் சென்னை அணி படைத்துள்ளது. இந்த சீசனில் தோனி, வாட்சன், ராயுடு ஆகியோர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இந்த சீசனில் 16 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி, மொத்தமாக 145 சிக்ஸர்களை அடித்துள்ளது.

இதுதான் ஒரு சீசனில் ஒரு அணி அடித்த அதிகமான சிஸ்கர்கள். சென்னை அணிக்கு அடுத்த இடத்தில் 142 சிக்ஸர்களுடன் பெங்களூரு அணி இரண்டாமிடத்தில் உள்ளது. 2016 ஐபிஎல்லில் பெங்களூரு அணி 142 சிக்ஸர்களை அடித்துள்ளது.