Congratulations India two team participate in world championships
ஜூனியர் என்பிஏ கூடைப்பந்து உலக சாம்பியன் போட்டியில் டெல்லி ஆடவர், பெங்களூரு மகளிர் அணிகள் கலந்து கொள்கின்றன.
ஜூனியர் என்பிஏ கூடைப்பந்து உலக சாம்பியன் போட்டி அமெரிக்காவின் என்பிஏ சங்கம் சார்பில் நடத்தப்படுகிறது.
கூடைப்பந்து விளையாட்டை பல்வேறு நாடுகளில் அடிமட்ட அளவில் பிரபலப்படுத்த இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
2017-18-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 71 நாடுகளில் 26 இலட்சம் இளைஞர்களை கூடைப்பந்து விளையாட்டில் ஈர்க்கும் வகையில் என்பிஏ திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
என்பிஏ இந்திய தேசிய சுற்றில் பெங்களூரு, சென்னை, டெல்லி, ஐதராபாத், கேரளம், கொல்கத்தா, மும்பை, பஞ்சாப் சார்பில் எட்டு வீரர்கள், எட்டு வீராங்கனைகள் கொண்ட அணிகள் போட்டியில் கலந்து கொண்டன.
இதில் ஆடவர் பிரிவில் டெல்லி 81-71 என்ற புள்ளிக்கணக்கில் கொல்கத்தாவையும், பெங்களூரு மகளிர் அணி 41-38 என்ற புள்ளிக்கணக்கில் சென்னையையும் வீழ்த்தின.
டெல்லி ஆடவர், பெங்களூரு மகளிர் அணிகள் இரண்டும் வரும் ஆகஸ்ட் மாதம் 7 முதல் 12-ஆம் தேதி வரை அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் நடக்கும் உலக சாம்பியன் போட்டியில் கலந்து கொள்கின்றன.
