Asianet News TamilAsianet News Tamil

தேசிய விளையாட்டு போட்டிகளில் 74 பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

தேசிய விளையாட்டு போட்டிகளில் 25 தங்கம் உட்பட 74 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 5ம் இடத்தை பிடித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 

cm mk stalin wishes and proud of tamil nadu athletes who won 74 medals in national games 2022
Author
First Published Oct 14, 2022, 9:20 PM IST

36வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் நடந்தது. இதில் நாடு முழுவதிலுமிருந்து 7000க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடினர். 56 தங்கம் உட்பட மொத்தம் 121 பதக்கங்களை வென்ற சர்வீஸஸ் அணி மீண்டும் முதலிடத்தை தக்கவைத்தது. 

25 தங்கம், 22 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 74 பதக்கங்களை வென்ற தமிழகம் 5ம் இடத்தை பிடித்தது.  மகாராஷ்டிரா 2ம் இடத்தையும், ஹரியானா 3ம் இடத்தையும், கர்நாடகா 4ம் இடத்தையும் பிடித்தன. 

இதையும் படிங்க - என்னை யாரும் கன்சிடர் கூட பண்றது இல்லைல..? டி20 போட்டியில் காட்டடி சதம் அடித்து கவனம் ஈர்த்த பிரித்வி ஷா

தேசிய விளையாட்டு போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி 74 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 5ம் இடத்தை பிடித்து அசத்திய தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மாற்று வீரராக முகமது ஷமி அறிவிப்பு.! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இதுகுறித்த டுவிட்டர் பதிவில், 74 பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளை நினைத்து பெருமைப்படுவதாகவும், தமிழக விளையாட்டு வீரர்களுக்கு என்றுமே  ஆதரவாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்துதருவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios