Christian pulisic selected as best football player
அமெரிக்காவில் ஆடவர் பிரிவில் இந்தாண்டின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியன் புலிசிக் (19) தேர்வு செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் ஆடவர் பிரிவில் இந்தாண்டின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியன் புலிசிக் தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதை பெறும் இளம் வீரர் என்ற சிறப்பை அவர் அடைந்துள்ளார்.
அமெரிக்கா கால்பந்து அணியிலும், ஜெர்மனியின் புரோஸியா டோர்ட்மண்ட் கிளப் அணியிலும் இவர் விளையாடி வருகிறார்.
இந்தாண்டு அமெரிக்கா கால்பந்து அணியில் ஒன்பது முறை விளையாடிய கிறிஸ்டியன் புலிசிக், ஆறு கோல்களை பதிவு செய்து அசத்திள்ளார்.
விருது பெற்றது குறித்து கிறிஸ்டியன் புலிசிக் கூறியது: "மிக இளம் வயதில் எனக்கு கிடைத்த இந்த விருதை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். எனக்கு வாக்களித்தவர்களுக்கும், தொடர்ந்து ஆதரவு அளித்துவருபவர்களுக்கும் நன்றி" என்றார் கிறிஸ்டியன்.
அந்நாட்டு கால்பந்து அணியின் முன்னாள் வீரர் லாண்டன் டோனோவன் கடந்த 2003-ஆம் ஆண்டில் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டபோது இளம் வயதில் இவ்விருதை பெறுபவராக இருந்தார். அப்போது அவருக்கு 21 வயது. அதனை கிறிஸ்டியன் புலிசிக் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
