Chinese Open Elina Swydolina next round to overthrow Chinese veteran
சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, கரோலின் வோஸ்னியாக்கி, அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா, எகாடரினா மகரோவா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
சீன ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஒன்றில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினாவும், சீனாவின் ஸலின்னும் மோதினர். இந்த ஆட்டத்தில் எலினா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.
அதேபோல், உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவும், ஸ்பெயினின் சுவாரெஸ் நவாரோவும் மோதிய மற்றொரு ஆட்டத்தில், பிளிஸ்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.
மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் சீனாவின் வாங் கியாங்கை எதிர்கொண்ட டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி அதில் 6-1, 7-6(7), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.
அதேபோன்று போலந்தின் அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா தனது 2-வது சுற்றில் ஜெர்மனியின் கரீனா வித்தாஃப்டை 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.
ரஷியாவின் எகாடரினா மகரோவா 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
