Asianet News TamilAsianet News Tamil

சீன ஓபன்: சாத்விக்சாய்ராஜ் - அஸ்வினி பொன்னப்பா இணை பிரதான சுற்றுக்கு முன்னேற்றம்...

Chinese Open Chidwick sayaraj - Aswini Ponnappa co-lead main round
Chinese Open Chidwick sayaraj - Aswini Ponnappa co-lead main round
Author
First Published Nov 15, 2017, 10:29 AM IST


சீன ஓபன் உலக சூப்பர்சீரிஸ் ப்ரீமியர் பாட்மிண்டன் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - அஸ்வினி பொன்னப்பா இணை பிரதான சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.

சீன ஓபன் உலக சூப்பர்சீரிஸ் ப்ரீமியர் பாட்மிண்டன் சீனாவில் நடைப்பெற்று வருகிறது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவில் சீன தைபேவின் லீ ஜே ஹுவே - வு டி ஜங் இணையை எதிர்கொண்டது சாத்விக்  - அஸ்வினி இணை.

இதில் 24-22, 21-7 என்ற செட் கணக்கில் சாத்விக்  - அஸ்வினி இணைவென்றது.

இந்த இணை இரண்டாவது தகுதிச்சுற்றில் டென்மார்க்கின் நிக்லஸ் நோர் - சாரா திகேசென் இணை 21-16, 19-21, 22-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள பிரதான சுற்றில், டென்மார்க்கின் மதியாஸ் கிறிஸ்டியான்சென் - கிறிஸ்டியானா பெடர்சென் இணையை சாத்விக் - அஸ்வினி இணை சந்திக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios