China thaibe defeated by india in first match

இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டததில் சீன தைபேயை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது இந்தியா.

வரும் 2019-ல் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடக்கிறது. இதற்கு இந்தியா தகுதி பெற்ற நிலையில் அணியை பலப்படுத்தும் வகையில் இந்தியா, தாய்லாந்து, கென்யா, நியூஸிலாந்து உள்ளிட்ட நான்கு நாடுகள் பங்கேற்கும் இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டி மும்பையில் நடத்தப்படுகிறது.

இதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும் - சீன தைபே அணியும் மோதின. இதில் கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோலடித்தார். இந்திய வீரர்கள் உதாந்தா, ஹால்தர் ஆகியோரும் கோலடித்தனர்.

இந்திய வீரர்களின் தாக்குதல் ஆட்டத்தை தைபே அணியால் எதிர்கொள்ள முடியாமல் தோல்வியைத் தழுவியது.

அந்த அணி ஒரு கோல் கூட போட முடியாமல் முதல் ஆட்டத்திலேயே தோல்வி அடைந்தது.