செஸ் ஒலிம்பியாட்: 5வது சுற்றில் இந்தியாவின் நந்திதா, அபிமன்யூ வெற்றி! ஓபன் பிரிவில் இந்தியா பி அணி வெற்றி

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்கள்,வீராங்கனைகள் 5வது சுற்றிலும் அபாரமாக விளையாடி வெற்றி பெற்று வருகின்றனர்.
 

chess olympiad 2022 india players played well and win in fifth round

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்திய வீரர்கள், வீராங்கனைகள் செஸ் ஒலிம்பியாடில் சிறப்பாக விளையாடிவருகின்றனர்.

4 சுற்றுகளில் நன்றாக ஆடிய இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் அபாரமாக ஆடுகின்றனர்.

இதையும் படிங்க-  நல்ல பிளேயரை சீரழித்துவிடாதீர்கள்..! ரோஹித்தை விளாசிய ஸ்ரீகாந்த்

செஸ் ஒலிம்பியாடில் அபாரமாக ஆடிவரும் தமிழகத்தில் சேலத்தை சேர்ந்த நந்திதா, பிரேசில் வீராங்கனை லிப்ரெஸாடோவை 33வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

ஓபன் பிரிவில் இந்திய பி அணியில் ஆடிய தமிழகத்தை சேர்ந்த குகேஷ் மற்றும் அதிபன் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். இந்திய பி அணி ஸ்பெய்னை எதிர்கொண்டு ஆடியது. வலிமை வாய்ந்த ஸ்பெய்ன் அணியின் பொனெல்லியை 45 நகர்த்தலில் வீழ்த்தி அதிபன் வெற்றி பெற்றார். 

இதையும் படிங்க ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு..! ஆகஸ்ட் 28ல் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

பி அணியில் ஆடிய மற்றொரு வீரரான தமிழகத்தை சேர்ந்த குகேஷ், ஸ்பெய்ன் வீரர் அலெக்ஸி சிரோவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

சிலி நாட்டு வீரர் ஹூகோவை 41வது நகர்த்தலில் வீழ்த்தி அபிமன்யூ வெற்றி பெற்றார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios