chennai super kings vs delhi daredevils match today
டெல்லி அணியும் சென்னை அணியும் இன்று இரவு 8 மணிக்கு புனே மைதானத்தில் மோதுகின்றன.
இந்த ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்து சென்னை அணி சிறப்பாக விளையாடிவருகிறது. பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியை தவிர மற்ற போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி அணி, இதுவரை ஆடியுள்ள 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில், டெல்லி அணி கொல்கத்தாவை வீழ்த்தி தொடர் தோல்வியிலிருந்து மீண்டெழுந்துள்ளது.
அனுபவ வீரர்கள் நிறைந்த சென்னை அணியும், இளம் வீரர்கள் நிறைந்த டெல்லி அணியும் இன்று மோதுகின்றன.
சென்னை அணியில், தோனி, வாட்சன், பிராவோ, ரெய்னா, ஹர்பஜன் சிங், ரவீரந்திர ஜடேஜா, டுபிளெசிஸ் என அனுபவ வீரர்கள் நிறைந்துள்ளனர்.
டெல்லி அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், விஜய் சங்கர், டேவாடியா, ஆவேஷ் கான் ஆகிய இளம் வீரர்கள் நிறைந்துள்ளனர்.
அனுபவமும் இளமையும் மோத இருக்கும் இந்த போட்டி, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
