காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் கடுமையான போராட்டங்கள் நடந்து வருவதால் சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் புனே மைதானத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் புனே மைதானத்தின் பராமரிப்புக்காக பவாணா அணையிலிருந்து தண்ணீர் எடுக்க நீதிபதிகள் தடை விதித்தனர். இதனால் அங்கு போட்டிகள் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்ததால்  சென்னையில் நடைபெற இருந்த சிஎஸ்கே அணியின் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  புனே மைதானத்தை பராமரிக்க அதிகளவு தண்ணீர் தேவைப்படும் ஆனால் புனேவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.  எனவே இந்தப் போட்டிகளை புனேவில் நடத்த தடை வித்தக வேண்டும் என  மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.


இதையடுத்து  மைதானத்தை பராமரிக்க தண்ணீர் எப்படி ஏற்பாடு செய்வீர்கள்? என கேள்வி எழுப்பிய  நீதிமன்றம்  இது குறித்து  .மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் பதிலளிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்,  இன்று  இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பவாணா அணையிலிருந்து மைதான பராமரிப்பிற்கு தண்ணீர் எடுக்க நீதிபதிகள் தடை விதித்தனர். இதனால், சென்னை அணிக்கு மீண்டும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.