chennai super kings players list
சூதாட்டப் புகார் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை தோனி தலைமையில் மீண்டும் களம் காண்கிறது. இதையடுத்து சென்னை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தோனி, ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்களை சென்னை அணி தக்கவைத்தது.

11வது ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. அந்த ஏலத்தில், டுபிளெசிஸ், டிவைன் பிராவோ ஆகிய வீரர்களை ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி சென்னை அணி தக்கவைத்தது.
இந்திய ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவை ரூ.7.8 கோடிக்கும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனை ரூ.4 கோடிக்கும் சென்னை அணி எடுத்தது.


சென்னை அணியின் செல்லப்பிள்ளையான அஷ்வினை ஆர்டிஎம் முறையில் தக்கவைக்க சென்னை அணி முயன்றது. ஆனால் சென்னை எதிர்பார்த்த தொகையை விட அதிகமான தொகைக்கு அஷ்வினை பஞ்சாப் அணி எடுத்ததால், சென்னை அணியால் அஷ்வினை தக்கவைக்க முடியவில்லை.

எனவே அஷ்வினுக்கு மாற்றாக ஹர்பஜன் சிங்கை ரூ.2கோடிக்கு சென்னை அணி எடுத்தது.
முதல் ஏலத்தில் அனைத்து அணிகளாலும் புறக்கணிக்கப்பட்ட தமிழக வீரர் முரளி விஜய், மீண்டும் ஏலம் விடப்பட்டபோது சென்னை அணி விஜயை எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
1. மகேந்திர சிங் தோனி – ரூ. 15 கோடி
2. சுரேஷ் ரெய்னா – ரூ. 11 கோடி
3. ஜடேஜா – ரூ. 7 கோடி
ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்:
4. முரளி விஜய் – ரூ. 2 கோடி
5. கேதார் ஜாதவ் – ரூ. 7.80 கோடி
6. டிவைன் பிராவோ – ரூ. 6.40 கோடி
7. டு பிளிசிஸ் – ரூ. 1.6 கோடி
8. ஷேன் வாட்சன் – ரூ. 4 கோடி
9. அம்பதி ராயுடு – ரூ. 2.2 கோடி
10. ஹர்பஜன் சிங் – ரூ. 2 கோடி
11. கரண் சர்மா – ரூ. 5 கோடி
12. சாம் பில்லிங்ஸ் – ரூ. 1 கோடி
13. என். ஜெகதீசன் – ரூ. 20 லட்சம்
14. கனிஷ்க் சேத் – ரூ. 20 லட்சம்
15. த்ருவ் ஷோரே – ரூ. 20 லட்சம்
16. சைத்தான்யா பிஷ்னாய் – ரூ. 20 லட்சம்
17. தீபக் சாஹர் – ரூ. 80 லட்சம்
18. மிட்செல் சான்ட்னெர் – ரூ. 50 லட்சம்
19. சிட்டிஸ் ஷர்மா – ரூ. 20 லட்சம்
20. ஷர்துல் நரேந்திர தாகூர் – ரூ. 2.6 கோடி
21. மார்க் வுட் – ரூ. 1.5 கோடி
22. இம்ரான் தாஹிர் – ரூ. 1 கோடி
23. லுங்கி நிகிடி – ரூ. 50 லட்சம்
24. கேஎம் ஆசிஃப் – ரூ. 40 லட்சம்
25. மோனு சிங் ரூ. 20 லட்சம்
