Chennai Super Kings - Rajasthan Royals fights today


ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது. 

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின் சிஎஸ்கே அணி தற்போது தான் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதற்கிடையே பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே முதல் போட்டி சென்னையில் நடைபெற்றது. அதில் சிஎஸ்கே வென்றது. எனினும் பாதுகாப்பு கருதி சிஎஸ்கே உள்ளூர் ஆட்டங்கள் புணேவுக்கு மாற்றப்பட்டன. மூன்று ஆட்டங்கள் விளையாடி 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் சிஎஸ்கே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கு ஆட்டங்கள் ஆடி 2 வெற்றி, 2 தோல்வியை சந்தித்துள்ள நிலையில் தற்போதைய ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது. 

ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் ஒளிர்கிறார் வருகிறார். ரஹானே தனது வழக்கமான ஆட்டத்துக்கு இன்னும் திரும்பவில்லை. பந்துவீச்சில் கெளதம், லாஹ்லின் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கை தருகின்றனர். பென் ஸ்டோக்ஸ் இதுவரை தனது திறனை வெளிப்படுத்தவில்லை.

சிஎஸ்கே அணி மும்பை, கொல்கத்தா அணிகளை வென்று, பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது. தோனி, பிராவோ, அம்பதி ராயுடு, ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். பந்துவீச்சில் வாட்சன், தாகுர், தாஹிர், ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.அனுபவ வீரர்கள் ஹர்பஜன், ரவீந்திர ஜடேஜா உள்ளதும் சிஎஸ்கே அணிக்கு பலமாக உள்ளது.

இரு அணிகளுமே 2 ஆண்டுகள் தடைக்கு பின் நேரடியாக மோதுவதால் இந்த ஆட்டத்தை காண 1000 ரசிகர்கள் புணேவுக்கு சிறப்பு ரயில் மூலம் பயணித்துள்ளனர்.