Asianet News TamilAsianet News Tamil

ஸ்பெயின் வீரர் ரோபர்ட்டோ அகுட் சாம்பியன் சென்னை ஓபன் டென்னிஸ்

chennai open-tennies
Author
First Published Jan 9, 2017, 5:44 AM IST
ஸ்பெயின் வீரர் ரோபர்ட்டோ அகுட் சாம்பியன்

சென்னை ஓபன் டென்னிஸ்

 

சென்னையில் கடந்த ஒருவாரமாக நடந்த ஏ.டி.பி.அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன்டென்னிஸ் போட்டியின் 2017ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வீரர்ரோபர்ட்டோ பாடிஸ்டா அகுட் கைப்பற்றினார்.

தெற்கு ஆசியாவின் ஒரே ஏ.டி.பி. அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு அரங்கில் கடந்த ஒருவாரமாக நடந்து வந்தது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ரஷிய வீரர் டேனில்மெட்வெத்தேவை எதிர்கொண்டார் ஸ்பெயின் வீரர் ரோபர்ட்டோ பாடிஸ்டா அகுட்.

ஒருதரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் மெட்வத்தேவ்வை 6-3, 6-4 என்றேநர்செட்களில் எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ரோபர்ட்டோ தட்டிச் சென்றார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் நடந்தது.

இதில் ரஷிய வீரர் மெத்மதேவ் முதல் முதலாக ஏ.டி.பி. இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளார். கோப்பையை வென்ற அகுட் 2-வது முறையாக சென்னைஓபனில் பங்கேற்று, மகுடம்சூடியுள்ளார். இதற்கு முன், கடந்த 2013ம் ஆண்டு பங்கேற்று இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios