Chennai fc team 8 players removed from team

ஐஎஸ்எல்-ன் நடப்புச் சாம்பியனான சென்னையின் அணியை சேர்ந்த எட்டு வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இந்திய சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) சீசனில் சென்னையின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது அதில் இடம் பெற்றிருந்த எட்டு வீரர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக சென்னையின் அணியில் விளையாடும் தனசந்திரா சிங், பிக்ரம்ஜித் சிங், கீனன் அல்மெடா, ஜூட் நோரோ, புல்கான்சோ கார்டோசா, சஞ்சய் பால்முச், பவன்குமார், ஷாகின் லா உள்ளிட்ட 8 வீரர்களின் ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்தன. 

எனினும், கடந்த சீசனில் ஆடிய 13 வீரர்களை சென்னையின் அணி தக்க வைத்துள்ளது. தலைமை பயிற்சியாளர் ஜான் கிரேகோரி, விளையாட்டு நிபுணர் நீயல் கிளார்க் ஆகியோரும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

வரும் 2019-ல் நடைபெறும் ஏஎப்சி கோப்பைக்கான போட்டியில் சென்னையின் அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.