தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான வலைகோல் பந்தாட்டப் போட்டியின் காலிறுதியில் வென்று சென்னை, கோவை, திருச்சி கல்லூரிகள் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான காஜாமியான் கோப்பைக்கான வலைகோல் பந்தாட்டப் போட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது.

தமிழகம் மற்றும் கேரள மாநிலக் கல்லூரிகள் பங்கேற்று விளையாடிய இதில், நேற்று நடைபெற்ற காலிறுதியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியையும் அணிகள் மோதின.

இதில், 3-0 என்ற கோல் கணக்கில் கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியை, திருச்சி ஜமால் முகமது கல்லூரி வீழ்த்தி வெற்றி பெற்றன.

அதேபோன்று சென்னை நாசரேத் கல்லூரி, சேலம் ஏவிஎஸ் கல்லூரியை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றிப் பெற்றன.

பின்னர், கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி மற்றும் சௌராஷ்டிரா கல்லூரியை இடையேயான ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் மதுரை சௌராஷ்டிரா கல்லூரியை வீழ்த்தி கோவை அணி வென்றது.

மற்றொரு ஆட்டத்தில் கோவை மருத்துவர் என்.ஜி.பி. கல்லூரி, திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி இடையேயான ஆட்டத்தில் கோவை அணி வென்றது.