தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நேரில் காண டிக்கெட் விற்பனை  இன்று தொடங்கியுள்ளது. 

செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இதுவரை 43 செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர் நடந்திருக்கிறது. அதில் ஒன்று கூட இந்தியாவில் நடந்ததில்லை. முதல் முறையாக இந்த ஆண்டு இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதுவும் தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது.

வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கின்றன. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். 

இதையும் படிங்க - IRE vs NZ: ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது ஓவரில் அதிகபட்ச ரன் சேஸ்..! வரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை காண டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. ஆன்லைனில் tickets.aicf.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.200லிருந்து அதிகபட்சம் ரூ.8000 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஒரு நாள் முழுவதும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை காண, இந்தியர்களுக்கு ரூ.2000 - ரூ.3000 மற்றும் வெளிநாட்டினருக்கு ரூ.6000 - ரூ.8000 என டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க - 11 வருஷத்துக்கு முன் சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் போட்ட டுவீட்..! இப்ப செம வைரல்

மாணவர்கள், பெண்கள், 19 வயதுக்குட்பட்டோர் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு 2 மணி நேரத்திற்கு ரூ.200 - ரூ.300 டிக்கெட் கட்டணம் ஆகும்.