Champions League Soccer Progress for Real Madrid Finals for the Third Time

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மூன்றாவது முறையாக ரியல் மாட்ரிட் அணி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஐரோப்பாவில் உள்ள பிரபல கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் லீக் போட்டியின் அரையிறுதிச் சுற்றுப் போட்டிகள் இரண்டு கட்டமாக ரியல் மாட்ரிட் அணிக்கும், பேயர்ன் மியுனிச் அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. 

மாட்ரிட்டில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது. இரண்டாம் சுற்று ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வென்று இறுதிச் சுற்றுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக தகுதி பெற்றது. 

மாட்ரிட் அணியின் கரீம் பென்சாமா முதல் பாதியில் அடித்த கோல் மூலம் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. இரண்டாம் பாதியிலும் பென்சாமா அடித்த கோலால் மாட்ரிட் அணி முன்னிலை பெற்றது.

இரு சுற்றுக்களில் பெற்ற கோல்கள் அடிப்படையில் 4-3 என்ற சராசரியில் ரியல் மாட்ரிட் அணி இறுதிக்கு முன்னேறியது. இது மூன்றாவது முறையாக இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி முன்னேறியுள்ளது.