champions criket...India beat pakistan
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடினர்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் ஜூன் 1 முதல் 18 வரை நடைபெறுகிறது.
இத்தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நேற்று நடைபெற்று நடைபெற்றது. . பிர்மிங்ஹாமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தைப் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களுடன் நடிகர் தனுஷ், விஜய் மல்லையா உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.
இப்போட்டியிங் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 319 ரன்கள் குவித்தது. பின் டக்வொர்த் லீவிஸ் முறையில் 41 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 164 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் பறிகொடுத்து பரிதாபமாக தோற்றது.
124 ரன்கள் விதிதியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி மீண்டும் பாகிஸ்தான் அணியை மண்ணைக் கவ்வ வைத்தது.
அதிரடியாக விளையாடிய யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது .
இந்த வெற்றியை இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
