Central ministry to recommend pv sindhu for Padma Bhushan
இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் பெயரை பத்ம பூஷண் விருதுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது.
ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியரான பி.வி.சிந்து தற்போது உலகின் அனைவராலும் அறியப்பட்ட ஒரு வீராங்கனையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சிந்து இதுவரை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு வெள்ளி மற்றும் இரு வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளார்.
கடந்த ஓராண்டில் மட்டும் சீன ஓபன், இந்திய ஓபன், கொரிய ஓபன் ஆகிய சூப்பர் சீரிஸ் போட்டிகளில் சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பதும், மக்காவ் ஓபனில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிந்து தற்போது தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். சிந்துவுக்கு 2015-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து சிந்து, “நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருதுக்கு தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
விருதுக்கு தனது பெயரை பரிந்துரைத்ததற்காக மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
