Carrom Championship tamilnadu girls won Champion in two Division
44-வது தேசிய சப்-ஜூனியர் மற்றும் மாநிலங்கள் இடையேயான கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக சிறுமிகள் இரு பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்றனர்.
44-வது தேசிய சப்-ஜூனியர் மற்றும் மாநிலங்கள் இடையேயான கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் மும்பையில் நடைப்பெற்றது.
இதில் கேடட் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கஸிமா (12) தன்னை எதிர்த்து போட்டியிட்ட சக மாநிலத்தவரான அபிராமியை 21-0, 21-0 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தி சாம்பியன் வென்றார்.
இதையடுத்து, அபிராமி 2-ஆம் இடத்தையும், உத்தரப் பிரதேசத்தின் ரிஷிதா கேஷ்ரி 3-ஆம் இடத்தையும் பிடித்தனர்.
அதேபோல், சப்-ஜூனியர் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் ராதிகா (14), 15-2, 20-2 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்தின் ஷ்ருதி சோனாவேனை வீழ்த்தினார்.
இந்தப் பிரிவில் ஷ்ருதி 2-ஆம் இடத்தையும், உத்தரப் பிரதேசத்தின் மன்தாஷா இக்பால் 3-ஆம் இடத்தையும் பிடித்தனர்.
கேடட் சிறுவர்கள் பிரிவில் உத்தரப் பிரதேசத்தின் கிருஷ்ணதயாள் யாதவ் 21-2, 8-14, 21-7 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்தின் நிலன்ஷ் சிப்லுன்கரை வென்றார்.
இந்தப் பிரிவில் நிலன்ஷ் சிப்லுன்கரை இரண்டாம் இடத்தையும், விதர்பாவின் சூரஜ் கெய்க்வாட் 3-ஆம் இடத்தையும் பிடித்தார்.
அதேபோன்று சப்-ஜூனியர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் டெல்லியின் முகமது அரீப் 9-7, 13-18, 21-0 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்தின் ஓம் தவாரேவை வென்றார்.
இந்தப் பிரிவில் ஓம் தவாரேவை 2-ஆம் இடத்தையும், அஸ்ஸாமின் வாகிப் இக்பால் ஹுசைன் 3-ஆம் இடத்தையும் பிடித்தனர்.
