Captain Kohli Harmenpreet Gaur was awarded the Bali Ummer Award by the BCCI ....
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் விராட் கோலி மற்றும் ஹர்மன்பிரீத் கெளர் உள்ளிட்ட வீரர்களுக்கு பிசிசிஐ விருது வழங்கி சிறப்பித்தது.
சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு ஆண்டுதோறும் பிசிசிஐ விருதுகள் வழங்குகிறது. அதன்படி, பிசிசிஐ சிறப்பு விருதுகள் வழங்கும் விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது.
இதில், கடந்த 2016-17, 2017-18 என இரு சீசன்களுக்கான சிறந்த வீரர் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. இதில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அதேபோன்று, மகளிர் கிரிக்கெட் அணியில் 2016-17 சீசனுக்கு ஹர்மன்பிரீத் கெளர், 2017-18 சீசனுக்கு ஸ்மிருதி மந்தானா ஆகியோர் சிறந்த வீராங்கனைகளுக்கான விருதுகளை பெற்றனர்.
மேலும், முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா தலைமையில் 4 விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம், டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்துக்கும் விருது வழங்கப்பட்டது.
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஜொலித்த வீரர்கள் ஜலாஜ் சக்சேனா, பர்வேஸ் ரசூல், கருணால் பாண்டியா, ஆகியோரும் சிறந்த ஆல் ரௌண்டர்கள், சிறந்த ஒருநாள் போட்டி வீரர் உள்ளிட்ட விருதுகளை பெற்றனர்.
