இந்தூரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்து வரும் கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி இரட்டை சதம் அடித்து அசத்தினார். துணைக் கேப்டன் ரகானே சதம் அடித்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி அடிக்கும் 2-வது இரட்டை சதமாகும். இதற்கு முன் ஜூலை மாதம், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தெடரில் இரட்டை சதம் அடித்திருந்தார். ஒரே ஆண்டில் 2 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய கேப்டன் எனும் பெருமையையும் கோலி பெற்றார். 

இந்தூரில் நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் நடந்து வருகிறது. முதல்நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்திருந்த்து. கோலி 103 ரன்களிலும்,ரகானே 79 ரன்களிலும் இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஆட்டம் தொங்கியதில் இருந்தே நியூசிலாந்து பந்துவீச்சை இருவரும் எளிதாக எதிர்கொண்டு ரன்களைச் சேர்த்தனர். 

சிறப்பாக பேட் செய்த ரகானே சதம் அடித்தார். அதைத்தொடர்ந்து அதிரடியாக ஆடிய விராத் கோலி 273 பந்துகளில் 150 ரன்களையும், 347 பந்துகளில் இரட்டை சத த்தையும் எட்டினார். ரகானே முதல்முறையாக டெஸ்ட் அரங்கில் 150 ரன்களை எட்டினார். 

கோஹி 211 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இவரின் கணக்கில் 20 பவுண்டரிகள் அடங்கும். 4-வது விக்கெட்டுக்கு ரகானே-கோலி கூட்டணி 365 ரன்கள் குவித்தனர். 

டெஸ்ட் அரங்கில் விராத் கோலி அடிக்கும் 2-வது இரட்டை சதமாகும். இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 12 சதங்களையும், 12 அரைசதங்களையும் அடித்துள்ளார். 3,326 ரன்கள் சேர்துள்ளார். 

171 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி இதுவரை 7,212 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 25 சதங்களும், 36 அரைசதங்களும் அடங்கும்.

இதையடுத்து களமிறங்கிய ரோகித்சர்மாவுடன், ராகனே இணைந்து விளையாடி வருகிறார். இந்த டெஸ்ட் தொடரில் முதல்முறையாக இந்திய அணி ஒரே இன்னிங்சில் 400 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.