உலகின் மிகச்சிறந்த டி20 வீரர்களில் ஒருவராக திகழ்பவர் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அவரது ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மன்ஸ், டி20 லீக் தொடர்களில் அவருக்கான கிராக்கியை அதிகரித்தது.

ஐபிஎல்லில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடும் பிராவோ, கனடா பீரிமியர் லீக், ஆஃப்கானிஸ்தான் லீக், பாகிஸ்தான் லீக், பிக்பேஷ் லீக் என உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் ஆடப்படும் டி20 லீக் தொடர்களில் பிராவோ ஆடிவருகிறார்.

பிக்பேஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு ஆடிவரும் பிராவோ, மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிக்கு எதிராக ஒரு அபாரமான கேட்ச்சை பிடித்து மிரட்டியுள்ளார். 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியின் தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ், அடித்த பந்தை மிட் ஆஃப் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த பிராவோ அருமையாக கேட்ச் செய்தார். அந்த வீடியோ இதோ..

இந்த போட்டியில் ரெனெகேட்ஸ் அணி 121 ரன்கள் அடித்தது. 122 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவுலிங், ஃபீல்டிங்கில் அசத்திய பிராவோ, 9 பந்துகளில் 17 ரன்களை அடித்து பேட்டிங்கிலும் அசத்தினார்.