கிரிக்கெட் வரலாற்றில் பல பரிதாபமான மற்றும் காமெடியான ரன் அவுட்டுகள் நடந்திருக்கின்றன. அப்படியான ஒரு பரிதாப ரன் அவுட் பிக்பேஷ் டி20 லீக்கிலும் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் டி20 லீக் நடந்துவருகிறது. இதில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி தண்டர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 168 ரன்களை குவித்தது. 

169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி 97 ரன்களுக்கே ஆல் அவுட்டானதால் சிட்னி தண்டர்ஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 169 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் கடைசி விக்கெட்டாக களமிறங்கிய பில்லி ஸ்டேன்லேக், 17வது ஓவரின் ஒரு பந்தை ஸ்டேன்லேக் அடித்துவிட்டு ஓடும்போது கிரீஸிடம் சென்றபோது பேட் தரையில் ஊன்றிக்கொண்டதால் பேலன்ஸ் இழந்து ரன் அவுட்டானார். அந்த வீடியோ இதோ..