BCCI will take part in conference leader the BCCI Executive Board Option

வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவருடன், ஐசிசியின் சீர்திருத்தங்கள் குறித்து பிசிசிஐ நிர்வாகக் குழு கலந்தாலோசிக்க உள்ளது. இதில் பிசிசிஐ தலைவர் கலந்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்குப் பிறகே முழு உறுப்பினர் கௌரவம் வழங்குவது, வருவாய் பங்கீட்டில் மாற்றம், டெஸ்ட் போட்டியின் அமைப்பில் மாற்றம் என புதிய சீர்த் திருத்தங்களை கொண்டு வர ஐசிசி முன்மொழிந்தது.

இதற்கு பிசிசிஐ உள்ளிட்ட சில நாடுகளின் கிரிக்கெட் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதில், வங்கதேச கிரிக்கெட் வாரியமும் ஒன்றாகும்.

இந்த நிலையில், அந்த வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசன் பப்போனுடன், பிசிசிஐ நிர்வாகக் குழு ஐசிசியின் சீர்திருத்தங்கள் குறித்து கலந்தாலோசிக்க உள்ளது.

இதில், பிசிசிஐயின் தற்போதைய தலைவரான சி.கே.கன்னா, இணைச் செயலர் அமிதாப் செüதரி, பொருளாளர் அனிருத் சௌத்ரி ஆகியோர் பங்கேற்க வேண்டுமென பிசிசிஐ நிர்வாகக் குழு விருப்பம் தெரிவித்துள்ளது.

எனினும், அவர்கள் பங்கேற்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை.