BCCI has granted Rs 50 lakh to bowling coach Balaji Why?
இந்திய அணிக்காக விளையாடிய இலட்சுமிபதி பாலாஜியின் கோரிக்கையை ஏற்று பிசிசிஐ ரூ.50 இலட்சம் வழங்கியுள்ளது.
இந்திய அணிக்காக 2003- 04-ஆம் ஆண்டுக்கு முன்பு விளையாடத் தொடங்கிய முன்னாள் வீரர்களுக்கு பிசிசிஐ நிதியுதவி அளித்து வருகிறது. பிசிசிஐ முன்னாள் தலைவர் என்.சீனிவாசனால் 2012-ல் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
குறைந்தபட்சம் 10 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள முன்னாள் வீரர்களுக்கு இத்திட்டத்தால் பலன் கிடைக்கும்.
இதனையடுத்து எட்டு டெஸ்டுகள், 30 ஒருநாள், ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இலட்சுமிபதி பாலாஜிக்கு ரூ.50 இலட்சத்தை வழங்கியுள்ளது பிசிசிஐ.
இதுகுறித்து பாலாஜி கூறியது:
“என் கோரிக்கையை பிசிசிஐக்கு அனுப்பிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு நன்றி. கோரிக்கை வைத்த ஒரு மாதத்திற்குள் எனக்குப் பணம் கிடைத்துவிட்டது” என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு ரஞ்சி அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பாலாஜி, தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
