ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது இந்திய அணி. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனானது. 

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இந்திய அணி. இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 12, 15, 18 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து நேரடியாக நியூசிலாந்து செல்லும் இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. அதன்பின்னர் இந்திய அணி நாடு திரும்புகிறது. 

ஐபிஎல் தொடர் மார்ச் 23ம் தேதி தொடங்குகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த தொடருக்கான கால அட்டவணை மற்றும் போட்டி நடக்கும் இடம் ஆகியவை உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரம் இதோ..