Bawani Devi wins silver medal in sword competition
உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஸ்லாந்தில் நடைபெற்றது.
இதன் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் அலெக்ஸிஸ் பிரவுனை, தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை பவானி எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்தப் போட்டியில் 10-15 என்ற புள்ளிகள் கணக்கில் அலெக்ஸிஸ் பிரவுனிடம் வீழ்ந்தார் பவானி.
முன்னதாக பவானி தேவி காலிறுதியில் வெனிசூலா நாட்டின் பாரேட் டாரûஸ 15-9 என்ற புள்ளிகள் கணக்கிலும், அரையிறுதியில் இத்தாலியின் கிலா அர்பினோவை 15-10 என்ற புள்ளிகள் கணக்கிலும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பவானி தேவி கடந்த ஆண்டு இதே போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தது கூடுதல் தகவல். சர்வதேச வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பவானி தேவி பெற்றுள்ளார்.
