யூ 19 உலக கோப்பை தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த போட்டியில் வங்கதேச அணியும் இந்திய அணிக்கும் இடையே இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. பரபரப்பான ஆட்டத்து இடையில் வங்கதேச அணி இந்திய அணியை வீழ்த்தி முதன் முதலாக உலக கோப்பையை கைப்பற்றியிருக்கிறது.


அரை இறுதிப்போட்டியில் சதம் அடித்த ஜெய்ஷ்வால் இந்த போட்டியிலும் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் ஜெய்~;வால் சதத்தை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் 88 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்திய அணியின் சார்பில் பேட்டிங் செய்த வீரர்கள் மளமளவென்று சரிந்தனர்.ஜீரேல் 22 ரன் எடுத்திருந்த நிலையி;ல் ரன் அவுட்டானார்.அதன் பிறகு யாருமே இரட்டை இலக்க ரன் அடிக்கவே இல்லை. இந்திய அணி 6 விக்கெட் இழந்து 177 ரன்களுக்கு ரன் அவுட்டானது.
வங்கதேச அணிக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விளையாடியது. இந்திய அணியை வீழ்த்துவது வங்கதேச அணிக்கு அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இந்த சூழ்நிலையிலும் வங்கதேச அணி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வீழ்த்தியிருக்கிறது.

TBalamurukan