bangladesh defeat indai won asian cup
ஆசியக் கோப்பை மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்தியாவை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் மகளிரணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஆசியக் கோப்பை மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற இதன் இறுதி ஆட்டத்தில் ஆறு முறை சாம்பியன் வென்ற இந்தியாவும், வங்கதேச அணியும் மோதின.
முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 112 ஓட்டங்களையே எடுத்தது.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் மட்டுமே சிறப்பாக ஆடி 42 பந்துகளில் 56 ஓட்டங்களை குவித்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
வங்கதேச பந்து வீச்சாளர்கள் கடிஜா, ருமானா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர், ஆடிய வங்கதேசம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 113 ஓட்டங்களை எடுத்து வென்றது. அந்த அணியின் நிகார் சுல்தானா 27 ஓட்டங்கள், ருமானா 23 ஓட்டங்களை குவித்தனர். சிறப்பாக ஆடி 3 விக்கெட் வித்தியாசத்தில் முதன்முறையாக கோப்பையை வென்றது.
ஏற்கெனவே ரௌண்ட் ராபின் ஆட்டத்திலும் வங்கதேசத்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது என்பது கூடுதல் தகவல்.
