Bangalore defeated Ludhiana by a margin of 23 points to the team

ஃபெடரேஷன் கோப்பை தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் ஆடவர் பிரிவில் 23 புள்ளிகள் வித்தியாசத்தில் லூதியானவை வீழ்த்தி பெங்களூர் இராணுவ அணி வெற்றியைச் சூடியது.

31-ஆவது தேசிய கூடைப்பந்துப் போட்டிகள் தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகம், அரைஸ் அறக்கட்டளை, கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழகம், பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவற்றின் சார்பில் கோவை, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது.

இந்தப் போட்டியில், அன்றிரவு நடைபெற்ற ஆடவர் பிரிவின் கடைசி ஆட்டத்தில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 82 - 71 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் வருமான வரி அணியைத் தோற்கடித்தது.

இன்னொரு ஆட்டத்தில், கொச்சி சுங்கம் மற்றும் மத்திய கலால் அணி 78 - 77 என லூதியானா கூடைப்பந்து அகாதெமியை வெற்றிக் கண்டது.

இரண்டாவது நாளான நேற்று நடைபெற்ற ஆடவர் பிரிவு முதல் ஆட்டத்தில் பெங்களூர் ராணுவ அணி 87 - 64 என லூதியானா கூடைப்பந்து அகாதெமி அணியை வீழ்த்தியது.

பின்னர், டேராடூன் ஓ.என்.ஜி.சி. அணி 88 - 71 என கணக்கில் குஜராத் வருமான வரித் துறை அணியை தோற்கடித்தது.