இந்தியா - ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பறித்தது. அந்த அணி அனுபவமற்ற வீரர்களை பெற்றிருந்தாலும் நல்ல பேட்டிங் டெப்த் உள்ளது. அதேபோல ரிச்சர்ட்ஸன், பெஹ்ரெண்டோர்ஃப் ஆகிய இருவருமே அசத்தலாக பந்துவீசினர்.

முதல் போட்டியில் இந்திய அணியைவிட பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டனர். இந்திய அணி பும்ரா இல்லாததால் கடைசி ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது. அதுமட்டுமல்லாமல் பார்ட் டைம் பவுலிங் ஆப்ஷன் இல்லாமல் திணறியது. எனவே நாளை அடிலெய்டில் நடக்க உள்ள இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக கேதர் ஜாதவ் சேர்க்கப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன. 

அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. ஏனெனில் அந்த அணி வீரர்கள் அனைவரும் இளம் வீரர்களாக இருந்தாலும் அருமையாக ஆடினர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசினர். பேட்ஸ்மேன்கள், வேகப்பந்து வீச்சாளர்கள், ஸ்பின் பவுலர், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர், பேட்டிங் - ஸ்பின் ஆல்ரவுண்டர் என தற்போதைய ஆஸ்திரேலிய அணி நல்ல கலவையில் உள்ளது.

எனவே இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. முதல் போட்டியில் ஆடிய அதே அணிதான் இரண்டாவது போட்டியிலும் களமிறங்கும்.

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கம்ப், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நாதன் லயன், பீட்டர் சிடில், ரிச்சர்ட்ஸன், பெஹ்ரெண்டோர்ஃப்.