Australian Open venus Williams dropped in first round Fans shocked ...
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே வீனஸ் வில்லியம்ஸ், பெலிண்டா பென்கிக்குடன் மோதி வீழ்ந்ததால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஒரு வருடத்தில் மொத்தம் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் நடைபெறும். அதில், முதலில் வருவது ஆஸ்திரேலியன் ஓபன். அதன்படி, இந்த வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் ஜனவரி 15-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில், நடப்பு சாம்பியனும் , ஆஸ்திரேலியாவில் 7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முழு உடல் தகுதி இல்லை என்று கூறி இந்தமுறை போட்டியிலிருந்து விலகினார்.
அதேபோன்று, காயம் காரணமாக இங்கிலாந்தின் பிரபல டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரேவும் இந்தமுறை ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.
ஜப்பானின் கே.நிஷிகோரி, பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா ஆகியோரும் காயம் காரணமாக இந்தமுறை கலந்து கொள்ளவில்லை.
மேலும், மகளிர் இரட்டையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை இந்தியாவின் சானியா மிர்ஸாவும் இந்த முறை காயம் காரணமாக கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், கடந்தாண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் இந்தமுறை கிராண்ட்ஸ்லாம் போட்டியில் கலந்து கொண்டார்.
ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் முதல் சுற்றில் 20 வயது பெலிண்டா பென்கிக்குடன் மோதினார் வீனஸ் வில்லியம்ஸ்.
இந்த ஆட்டத்தில் 6-3, 7-5 என்கிற நேர் செட்களில் வீனஸ் வில்லியம்ஸ் வீழ்ந்தார். முதல் சுற்றிலேயே வீழ்த்தப்பட்டு போட்டியில் இருந்து விலகியது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
