Asianet News TamilAsianet News Tamil

அந்த விஷயத்துல சச்சின், டிராவிட்டை விட அவருதாங்க கிரேட்!! இப்படி ஒரு வீரரை நான் பார்த்ததே இல்ல.. இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய ஆஸி., பயிற்சியாளர்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, இந்த சுற்றுப்பயணத்தில்தான் ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதேயில்லை. 

australian coach justin langer amazed of pujaras concentration
Author
Australia, First Published Jan 11, 2019, 2:25 PM IST

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த புஜாராவை ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் புகழ்ந்து பேசியுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, இந்த சுற்றுப்பயணத்தில்தான் ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதேயில்லை. இந்த வரலாற்று சாதனைக்கு மிக முக்கிய காரணம் டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா. 

australian coach justin langer amazed of pujaras concentration

இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக புஜாரா இருந்திருக்கிறார். ஆஸ்திரேலிய தொடரில் 4 சதங்கள் அடிக்கப்பட்டன. அவற்றில் 3 சதங்கள் புஜாரா அடித்தவை, ஒரு சதம் மட்டும் கோலி அடித்தார். ஒரு பேட்ஸ்மேன் சதமடிப்பது முக்கியமல்ல, அந்த சதம் அணியின் வெற்றிக்கு பயன்பட்டிருக்கிறதா என்பதில் தான் அந்த சதத்துக்கான மதிப்பு உள்ளது. 

புஜாரா மந்தமாக ஆடுவதாக விமர்சனங்கள் இருந்தாலும், டெஸ்ட் போட்டியை பொறுத்தமட்டில் அவரது ஆட்டம் சரியானதுதான். புஜாரா மணிக்கணக்காக சளிப்பே இல்லாமல் பேட்டிங் ஆடக்கூடியவர். சிட்னி போட்டியின் முதல் இன்னிங்ஸில் 9 மணி நேரத்திற்கும் அதிகமாக பேட்டிங் ஆடினார். 

australian coach justin langer amazed of pujaras concentration

புஜாராவின் நிதானமான ஆட்டத்தை கண்டு வியப்படைந்த ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயன், புஜாராவிடம் இன்னும் உங்களுக்கு போர் அடிக்கவில்லையா என்று வெளிப்படையாகவே கேட்டார். அந்தளவிற்கு பவுலர்களை சோதித்துவிடுவார். புஜாராவின் தெளிவான மற்றும் நிதானமான மனநிலையும், சிதறாத கவனமும் அவரது பேட்டிங்கிற்கு வலுசேர்க்கின்றன.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்று வெற்றி நாயகனாக வலம்வருகிறார் புஜாரா. தங்களுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வதற்கு காரணமாக இருந்த புஜாராவை ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் புகழ்ந்துள்ளார். புஜாரா குறித்து பேசிய ஜஸ்டின் லாங்கர், ஒவ்வொரு பந்தையும் நன்கு கவனித்து கவனமாக ஆடுவதில் புஜாராவை போன்ற ஒரு பேட்ஸ்மேனை நான் பார்த்ததேயில்லை. சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் கூட இப்படி ஆடியதில்லை. புஜாராவின் கவனக்குவிப்புதான் எங்கள் அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று லாங்கர் பாராட்டியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios