ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தொடக்கத்திலேயே ரன்களையும் கட்டுப்படுத்தி 2 விக்கெட்டுகளையும் இந்திய பவுலர்கள்.
 
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி கலீல் அகமதுவுக்கு பதிலாக சிராஜை சேர்த்தது. முதல் போட்டியில் ஆடிய அதே ஆஸ்திரேலிய அணிதான் இந்த போட்டியிலும் களமிறங்கியது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஃபின்ச்சும் அலெக்ஸ் கேரியும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக தொடங்கினர். முதல் 7 ஓவர்கள் வரை ரன்களை குவிக்க அவசரப்படாமல், நிதானமாக ஆடினர். ஆனால் 7வது ஓவரின் கடைசி பந்தில் ஆரோன் ஃபின்ச்சை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் புவனேஷ்வர் குமார். 19 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஃபின்ச் அவுட்டானதற்கு அடுத்த ஓவரிலேயே அலெக்ஸ் கேரியை ஷமி வீழ்த்தினார். 

26 ரன்களுக்கே அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், கடந்த போட்டியை போலவே உஸ்மான் கவாஜாவும் ஷான் மார்ஷும் களத்தில் நிலைத்து நின்று பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிவருகின்றனர்.